
திருப்பத்தூர் | நாட்டாறம்பள்ளி அடுத்த புது கோவில் பகுதியில் சுமார் ஐந்து வருட காலமாக ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் ஸ்ரீராம் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று கடையை திறந்து உள்ளார். எதிர்பாராதமாக பட்டாசு வெடித்து மல மலவென பட்டாசு கடை முழுவதும் தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் படிக்க | பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து...
இந்த விபத்தில் குமார் (45) மற்றும் அவருடைய மகன் தயா மூர்த்தி (12) ஆகிய இருவரும் தீயில் கருகி உயிர் இழந்தனர்.
இச்சம்பம் அறிந்த வாணியம்பாடி மற்றும் நாட்டரம்பள்ளி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடைக்கு வந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு...