கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

தஞ்சாவூர் | பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் செயல்பட்ட திருஆரூரான் சர்க்கரை ஆலை 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

இந்த ஆலை மூலமாக கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று 75-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் கரும்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்...!

கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தமிழக அரசை கண்டித்தும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் ஆலை முன்பு  கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க | சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா.....