தக்காளி விலை வீழ்ச்சி ; கால்நடைகள் தின்னும் அவலம்...

தக்காளி விலை வீழ்ச்சி ; கால்நடைகள் தின்னும் அவலம்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி  ஆகிய பகுதிகளில் தக்காளிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தக்காளிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Tomato rice out of hotel menus as cost of veggie hits roof || Tomato rice  out of hotel menus as cost of veggie hits roof

தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும்  கனமழை காரணமாகவும்  கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையாலும் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவால், அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடந்த மே மாதத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டது.


இந்த நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கூடை தக்காளி பழங்கள் 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கூடை தக்காளி 50 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Tomatoes 101: Nutrition Facts and Health Benefits

இதனால் வேதனை அடைந்த தக்காளி விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு உள்ளனர். மேலும் பல விவசாயிகள் சாலையோரம் தக்காளி பழங்களை வீசிவிட்டு செல்கின்றனர். சாலை ஒரங்களில் கிடக்கும் தக்காளி பழங்களை ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்று வரும் அவல  நிலை ஏற்பட்டுள்ளது.தக்காளியில்  வைட்டமின் சி உள்ளதால் இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் இதனால் சரும பிரச்னைகளும் தீரும் .இவ்வகையான தக்காளி பழத்தின் விலை குறைந்து   விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.