விபத்தில் தூக்கி வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பலி...
சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தென்காசி | சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி(60) என்பவர் சங்கரன்கோவில் இருந்து மலையாங்குளம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க் நோக்கி இரு சக்கர வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது தச்சநல்லூர் பகுதி அழகனேரியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் தனது குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்று விட்டு இரண்டு கார்களில் குடும்பத்தாருடன் வந்து கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி தூக்கி வீசப்பட்டதில் முன்னாள் ராணுவ வீரர் கணபதி சம்பவ இடத்தில் பலியானார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னாள் ராணுவ வீரர் கணபதி மீது கார் மோதி தூக்கி வீசப்படும் நெஞ்சை பதபத வைக்க கூடிய சிசிடிவி கட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ருவாண்டா நாட்டு இளைஞர் கைது...