தொடர்மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளநீர்..குளிக்க தடை...

தொடர்மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளநீர்..குளிக்க தடை...

நேற்று இரவில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து  வெள்ளநீர் செல்கிறது.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குரங்கணி கொட்டகுடி பகுதிகளில் பெய்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கடந்த 10 நாட்களாகவே இப்பகுதியில் மழை இன்றி காணப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கி நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

மேலும் தெரிந்துகொள்ள | களைகட்டிய அண்ணாமலையார் திருக்கோயில்...தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்...!

இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ளப்பெருக்கானது அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக்கொண்டு செல்கிறது.தொடர்ச்சியாக மழை பெய்வதால் பாதுகாப்பு காரணம் கருதி நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினரும் காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.