பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை...

பழனி பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை...

திண்டுக்கல் | பழனி மேற்கு ரத வீதியில் அமைந்துள்ளது பழமையான பெருமாள் கோவிலில். பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தேவஸ்தானத்தில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெருமாள் கோவிலில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மருக்கு அணிவிக்க வெள்ளி கவசம் வழங்கப்பட்டது.

பழனியைச் சேர்ந்த பக்தர் செல்வகுமார் என்பவர் 25 கிலோ எடையில் வெள்ளிக்க கவசத்தை நன்கொடையாக வழங்கினார்.  பழனி கோயில் அதிகாரிகள் வெள்ளிக் கவசத்தை பெற்றுக்கொண்டு  சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சக்கரத்தாழ்வருக்கு அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்ட சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க | 1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...