சதுரகிரி மலைகோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் மற்றொரு பாதையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

சதுரகிரி மலைகோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம். இந்த கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது  சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோயிலுக்கு மாதந்தோரும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சகரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

மேலும் படிக்க | 2001 பொம்மைகள்... 108 சுமங்கலிகள் அர்ச்சனை... நவராத்திரி சிறப்பு பூஜை...

இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மஹாலய அமாவாசை முன்னிட்டும்,நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் கடந்த 23 ஆம் தேதிமுதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம், வனத்துறையினர் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்லும் மற்றொரு மலைப்பாதையான  சாப்டூர் வாழைத்தோப்பு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து செல்லக்கூடிய மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் இணைந்து வருமா? டிடிவி தினகரன் சொன்ன பதில்!

இந்நிலையில் தற்போது தேர்வு முடிந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் திடீரென மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலை ஏற திடீரென பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரப் பகுதியான   தாணிபாறை பகுதியில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவம்...! திருப்பதியில் களைகட்டிய பக்தர்கள் கூட்டம்...