மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை விரைந்து சீரமைக்க கோரிக்கை...

புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை விரைந்து சீரமைக்க கோரிக்கை...

மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நடைப்பாதையின் ஒரு பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

அதனை சரி செய்யும் பணிகள் மழைக்காலம் முடிந்தவுடன் துவங்கியது. ஆனால், இரண்டு மாதம் நிறைவடைந்தும் சேதமடைந்த பகுதி சரி செய்யப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடற்கரை நடைபாதை உருவாக்கிய திமுக அரசு சேதமடைந்துள்ள பகுதியை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறார் ராயபுரத்தில் சேர்ந்த மாற்றுத்திறனாளி சார்லஸ்.

மேலும் படிக்க | கடற்கரையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை...! சரிசெய்யப்பட்டு நாளை திறப்பு...!