மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர் சரமாரி குற்றச்சாட்டு...!

மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர் சரமாரி குற்றச்சாட்டு...!

கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மாநகராட்சி கவுன்சிலர் சரிதா வார்டுகளில் புதிதாக குழு ஒன்றை உருவாக்கி அதில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வார்டு உறுப்பினர் என்ற பெயரில் தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தன்னை மீறி வார்டுகளில் இவர்கள் செயலில் இறங்கினால் கலவரம் நடைபெறும் என பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பாமக கவுன்சிலர் சரவணன் பேசும்போது வார்டு பகுதியில் வீட்டின் அளவுகள் எடுப்பதற்காக வரும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக சரமாரி குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனை அடுத்து பேசிய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அனைத்து கவுன்சிலர்களும் ஒற்றுமையாக இருந்தால்தான் மாநகராட்சியை முன்னேற்ற முடியும் எனவும் கவுன்சிலர்கள் எந்த பிரச்சினை குறித்து தெரிவித்தாலும் அதனை உடனடியாக நிறைவேற்ற தான் உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.