அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானிலை அறிக்கை

தென் மண்டல தலைவருக்காக மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட தகவலின் படி, மழை மற்றும் சென்னை வானிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் - சென்னை வானிலை அறிக்கை
Published on
Updated on
1 min read

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கடலூர் 8,

புதுச்சேரி 7,

கடலூர் கலெக்டர் அலுவலகம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), நாங்குநேரி  (திருநெல்வேலி) தலா 6,

மரக்காணம் (விழுப்புரம்) 5,

வானுர்  (விழுப்புரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்)  தலா 4,

விருதாச்சலம் (கடலூர்), புவனகிரி  (கடலூர்), அகரம்  சீகூர் (பெரம்பலூர்) தலா 3,

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பண்ருட்டி (கடலூர்), விழுப்புரம், வேதாரண்யம் (நாகப்பட்டினம்),வல்லம் (தஞ்சாவூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 2,

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வேப்பூர் (கடலூர்), லால்பேட் (கடலூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), சிதம்பரம் (கடலூர்), திருப்பதிசாரம்  AWS (கன்னியாகுமாரி), தாம்பரம்  (செங்கல்பட்டு), மன்னார்குடி (திருவாரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு:  mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com