சிதம்பரம் : ஆருத்ரா தரிசனம்...! நடராஜரை காண குவிந்த பக்தர்கள் கூட்டம் ..!

சிதம்பரம் :  ஆருத்ரா தரிசனம்...!  நடராஜரை காண குவிந்த பக்தர்கள் கூட்டம் ..!

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான நடராஜர் உற்சவராக பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலின் தனி சிறப்பு. இதனால் ஆருத்ரா தரிசனத்தைகான உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. நாள்தோறும் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 

பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம்  நடைபெற்றது. நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரியுடன் நடராஜர் காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனத்தை ஓட்டி  சுமார் 1200க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் மற்றும் மாடவிதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை...! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!