சென்னை தியாகராய நகர்... திருப்பதி தேவஸ்தான குடமுழுக்கு... அனுமதி இல்லை!!

சென்னை தியாகராய நகர்... திருப்பதி தேவஸ்தான குடமுழுக்கு... அனுமதி இல்லை!!

சென்னை தியாகராய நகர் ஜி. என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் குடமுழுக்கு நாளை நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருவிழா:

இந்த நிலையில் மூலவரத்தில் வைக்கப்பட உள்ள பத்மாவதி தாயார் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதுவே திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பத்மாவதி தாயாரை வைத்து மூலவராக கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும். இதற்காக, கோவில் முழுவதும் வாழைமரம் கட்டப்பட்டு விழா கோலம் போல பிரம்மாண்டமாக குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடமுழுக்கு:

நாளை காலை 7:30 மணியிலிருந்து 7.44 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.  குடமுழுக்கு முடிந்த பிறகு 10 மணி முதல் 11 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்ற பிறகு தான் பொதுமக்களுக்கு 11 மணிக்கு மேல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல இன்று மற்றும் நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதி இல்லை:

ஜி. என்.செட்டி ரோடு மேம்பாலத்திற்கு கீழே இந்த கோவில் அமைந்து இருப்பதால் மேம்பாலத்திற்கு கீழே இரண்டு புறமும் பேரிகாடுகள் போடப்பட்டு காவல்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.  கோவிலுக்கு வெளியே ஆந்திரா காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சிறப்பு பூஜை தற்பொழுது நடைபெற்ற வருவதால் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை.  குடமுழுக்கு முடிந்த பிறகு தான் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டும் என்று கோவில்  நிர்வாகம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:   உத்தரவிட்ட ஐநா அவை... பின்பற்றிய தமிழ்நாடு!!