சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்க திட்டம்.. முன்விரோதத்தில் தான் விரித்த வலையில் தானே விழுந்த நபர்..!

முன்விரோதம் கொண்ட நபரை மாட்டிவிட எண்ணிய நபரை கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்க திட்டம்.. முன்விரோதத்தில் தான் விரித்த வலையில் தானே விழுந்த நபர்..!

மிரட்டல்கள்:

சமீப காலமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. பல நேரங்களில் இந்த மிரட்டல் வருவது மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும், சில நேரங்களில் வதந்தியாக வருவதும் உண்டு. 

மக்களிடம் பதற்றம்:

ஆயினும் இதனை நம்பி குறிப்பிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி, சோதனை மேற்கொள்வர். இதனால் 
மக்களிடமும் பதற்றமான சூழல் நிலவும். 

செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:

அந்த வகையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு 
வைக்க திட்டம் தீட்டுவதாக தகவல் வந்துள்ளது. தொலைப்பேசி மூலம் ரயில் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், தாம்பரத்தில் 
தனியார் தங்கும் விடுதியில் பணிபுரியும் அமீர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டுவதாக கூறியுள்ளார். 

புரளியான தகவல்:

இதனையடுத்து ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் மர்ம நபர் கூறிய அமீர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. 

முன்விரோதத்தால் நடந்தது அம்பலம்:

அத்தோடு ரயில் நிலையத்திற்கு போன் செய்த பூக்கடையை சேர்ந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக 
அமீரை போலீசாரிடம் சிக்க வைக்க இவ்வாறு செய்தது தெரியவந்தது.