உலக கண்பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வு மனித சங்கிலி..!

பார்வைத்திறன் குறைபாடு மீது விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது.
உலக கண்பார்வை தினத்தையொட்டி விழிப்புணர்வு மனித சங்கிலி..!
Published on
Updated on
1 min read

பார்வைத்திறன் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டை டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்களை மறைத்துக் கட்டிக்கொண்டு மனித சங்கிலி நிகழ்வை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண் மருத்துவர் மஞ்சுளா, கண்கள் அக்கறையுடன் பராமரிக்கப்பட்டால் பர்வைதிறன் பாதிப்பதை தடுக்கலாம். டிவி, லேப்டாப், செல்போன் பயன்பாடுகள் பார்வைத்திறன் குறைபாடு ஏற்பட காரணமாக உள்ளது.

டிஜிட்டல் சாதனைங்களை பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி எடுக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com