நீலகிரி | குன்னூர் அம்பிகாபுரம் காளியம்மன் கோவில் அருகே முருகன் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் சிறுத்தை வளர்ப்பு நாயை விரட்டி செல்கிறது. மேலும் உணவுத் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் ஆடு மாடு மேய்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென குன்னூர் வனசரகர் சசிக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
வழக்கம் போல் நேற்று இரவு தேயிலை தோட்டத்தில் இருந்து வந்த சிறுத்தை வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுலைந்துவளர்ப்பு நாயை விரட்டும் காட்சி CCTV கேமராவில் பதிவாகி உள்ளது. விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வில்லை என்றால் இப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படும் என்றும் குன்னூர் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | தொடங்கியது பொள்ளாச்சி புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு பணி...