மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்...

அரசு பள்ளியில் மாணவ்ர்கள் முன்பு, லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை

மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்...

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பது குறித்து உறுதிமொழி ஏற்ப்பு மற்றும் விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தற்போது லஞ்சம் என்பது புற்றுநோய் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குடும்ப உறுப்பினர்களால் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டிய அவல நிலைக்கு  தள்ளப்படுவதாகவும் அவர் பேசினார்.

மேலும் படிக்க | சிவகங்கை: ரூ.300 லஞ்சம் கேட்ட ஊராட்சிமன்ற தலைவர்.. 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!

மேலும் அவர்  நாம் அனைவரும் ஏழை, எளிய விவசாய குடும்பத்தில் . பிறந்தவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஏழையாய் பிறப்பது தவறல்ல, ஏழையாய் வாழ்வதும் வளர்வதும் தான் தவறு என்றும் ஆகவே மாணவ செல்வங்கள் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்ற உறுதிமொழியோடு செயல்பட வேண்டுமென்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வண்ணம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுடன் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | இன்ஸ்பெக்டர் வீட்டில் லட்சக்கணக்கில் பறிமுதல்... லஞ்ச வழக்கில் சிக்கிய அவலம்...