
திண்டுக்கல் | செம்பட்டியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடப்பது வழக்கம், காலை நேரத்தில் நடைபெறும் சந்தை என்பதால் செம்பட்டி ஆட்டுச்சந்தை தனிச்சிறப்பு வாய்ந்தது.
செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வருகின்றனர்.
இங்கு செம்மறி ஆடு, குரும்பாடு, வெள்ளாடு என பல வகை ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக கடும் குளிர் காலம் என்பதால் ஆட்டுசந்தையில் மந்தமாகவே வர்த்தகம் நடைபெற்றது. இருந்தபோதிலும் இன்றைறை ஆட்டுச்சந்தையில் 45-லட்சத்திற்க்கு வர்த்தகம் நடைபெற்றது. வரும் வாரம் பொங்கல் பண்டிகை வரவிருப்பதை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.