விவசாயிகளிடமிருந்து 27 லட்சம் மோசடி செய்த அமமுக நகர செயலாளர்!! பலவருடமாக ஏமாற்றியவரை தூக்கிய போலீஸ்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் கொடுக்காமல் 27 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த அ.ம.மு.க நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து 27 லட்சம் மோசடி செய்த அமமுக நகர செயலாளர்!! பலவருடமாக ஏமாற்றியவரை தூக்கிய போலீஸ்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு நீண்ட நாட்களாக பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை என்று விவசாயிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் புகார் தெரிவித்தனர்.

விவசாயிகள் புகாரினை தொடர்ந்து விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்யாமல் இருக்கும் வியாபாரியை உடனடியாக கைது செய்து அவரது சொத்துக்களை முடக்கி விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு உத்திரவிட்டார்.  

அதன்படி  27.12.19 முதல் 21.10.20 ஆய்வு செய்தபோது வரை நெல் வியாபாரி ராஜ் (34)  அரகண்டநல்லூர் (அரகண்டநல்லூர் அ ம மு க நகர செயலாளர் )   என்பவர் 2011-2016வரை அரகண்டநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய ரூபாய் 27லட்சத்து 45,803 பணத்தை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யாமல் ஏமாற்றி மோசடி செய்ததாக  விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவில் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் ராஜ் மீது  வழக்கு பதிவு செய்து செய்திருந்த நிலையில் நேற்று எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 40,000  பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

இந்த ஒழுங்குமுறை  விற்பனை கூடத்தில் மோசடியில் ஈடுபட்டுவரும்  இன்னும் சில வியாபாரிகள் மீதும் துணை போன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மற்ற வியாபாரிகள் மத்தியில் இந்த அதிரடி நடவடிக்கை பெரு. அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவருடத்திற்கு மேலாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இந்த விற்பனை கூடத்தில்  பணபட்டுவாடா உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் என்பது  விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.