விவசாய தோட்டத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானை..!

விவசாய தோட்டத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானை..!

ஓசூர் அருகே ஒற்றை காட்டு யானை விவசாய தோட்ட பகுதியில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம்.....

ஓசூர் அருகே செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியேறிய ஒற்றை காட்டு யானை விவசாய தோட்டத்தில் சுற்றி திரிந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர்

ஓசூர் அருகே செட்டி பள்ளி வனப்பதிலிருந்து இன்று அதிகாலை வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்து கோனேரிப்பள்ளி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் உலா வந்தது இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர்.

ஒற்றை யானை தற்போது சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களான குக்கலப்பள்ளி, ராமாபுரம்,ஆழியாளம், பன்னபள்ளி,போடூர் பள்ளம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு ஆடு,மாடு மேய்க்க வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் யானை தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க     | புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கினார்,.. நடிகர் அஜித்...!