மாசி கிருத்திகைக்கு கூடிய ஏராளமான பக்தர்கள்...

எட்டுக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாசி கிருத்திகைக்கு கூடிய ஏராளமான பக்தர்கள்...
Published on: 
Updated on: 
1 min read

நாகப்பட்டினம் | திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் பிரசிபெற்ற முருகனின் ஆதிபடைவீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் மிக்க இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி மாசி மாத கார்த்திகை நட்சத்திரமான இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டனர்.

பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com