எலியை விழுங்க முயற்சித்த பச்சை பாம்பு...

தேனி அருகே பச்சை பாம்பு எலியை விழுங்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எலியை விழுங்க முயற்சித்த பச்சை பாம்பு...

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள ஒரு புங்கன் மரத்தில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்று, வேலியில் அமர்ந்திருந்த எலியை தீடிரென பிடித்தது. சிறிய அளவிலான அந்த பச்சைப்பாம்பு, தன்னைவிட பெரிதாக இருந்த எலியின் வாயை கவ்வியபடி, அதை விழுங்க முயற்சித்தது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதை தங்கள் செல்போனில் படம் பிடத்தனர். சுமார் அரைமணிநேரம் எலியை வாயில் கவ்வியபடி பாம்பு அப்படியே இருந்தது. எலியும் துடித்தபடி பாம்பிடம் இருந்து விடுபட முயற்சி செய்தது. நீண்ட நேரமாக எலியை விழுங்க முயற்சித்த பச்சை பாம்பு கடைசியில் விழுங்க முடியாமல் எலியை விடுவித்து மரத்தில் ஏறி சென்றது.

காயமடைந்த எலி சில நிமிடங்கள் அங்கேயே நின்றுவிட்டு தாவிச் சென்று மறைந்தது. பச்சை பாம்பு எலியை விழுங்க முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | குடியிருப்பு பகுதியில் உலா வந்த 12 அடி நீளமான மலைப்பாம்பு... பொது மக்கள் பீதி...