அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கும் பெண் குழந்தைகள் காப்பகம்;உடனடியாக சரி செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு...

அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கும் பெண் குழந்தைகள் காப்பகம்;உடனடியாக சரி செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு...
Published on
Updated on
1 min read

அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கும் பெண் குழந்தைகள் காப்பகம்;உடனடியாக சரி

செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு...

மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு :

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே உள்ள பெண் குழந்தைகள் காப்பகம் சுகாதாரமற்ற  முறையில் இயங்கி வருவதாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

 மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு :

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே உள்ள வீடற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி ஒன்று வெளியானது. கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பெண் குழந்தைகள் அங்கு தங்கிவருதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தித்தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது மாநில மனித உரிமைகள் ஆணையம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com