விழிப்புணர்வு ஏற்படுத்த ஒற்றை கையில் வாள் வீசி சாதனை படைத்த சிறுவன்...!

விழிப்புணர்வு ஏற்படுத்த ஒற்றை கையில் வாள் வீசி சாதனை படைத்த சிறுவன்...!
Published on
Updated on
1 min read

கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில், கடந்த 8 ஆண்டுகளக, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சிலம்ப கலையை கற்று தருவது மட்டுமில்லாமல் மாணவ, மாணவிகள், கற்று கொண்ட கலையை, அனைவரும் பாராட்டும் வகையில், பல்வேறு முயற்சிகளின் அடிப்படைகளில், சாதனைகளாக மாற்றி அனைவரும் வியந்து போற்றும் வகையில் சாதனை பக்கங்களில் இடம் பிடிக்க செய்து வருகிற முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பினர் இன்று துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில், அழகர் சாமி, கீதா, தம்பதியினரின் கார்த்திக்(14) கடந்த ஒரு ஆண்டுகளாக சிலம்பகலைகளை கற்று வருகிறார்.

இந்த நிலையில், உலக தேசிய புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் மது, புகையிலை, கஞ்சா போன்ற போதை பழக்கங்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 மணி நேரம் இடை விடாமல் ஒற்றை கையில் வாள் வீசி உலக சாதனை படைத்தார். இதனை இந்தியன் புக் ஆப் வேர்ல்ட்  ரெக்கார்ட்ஸ் நிறுவனம், அமெரிக்கன் புக் ஆப் வெர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் யூரேப்பியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என மூன்று உலக சாதனை அமைப்பினர் இதனை அங்கீகரித்துடன் அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி பெருமை படுத்தி உள்ளளர். இந்த நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் அதற்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பெருமை படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நடுவர்களாக, பிரதீபா, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு இதனை உறுதி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அன்ட்லி ப்ளாக் பெல்ட் ஆகாடமி தலைவர் ஆனந்தகுமார் கலந்துகொண்டு போட்டியினை துவக்கி வைத்து, இறுதியில் சான்றிதழ், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும், கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவனுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com