சாக்லேட் பேக்டரிக்குள் புகுந்த கரடி...! சிசிடிவி காட்சியில் சிக்கிய சம்பவம்..!

சாக்லேட் பேக்டரிக்குள் புகுந்த கரடி...! சிசிடிவி காட்சியில் சிக்கிய சம்பவம்..!

குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடர்ந்த வனப் பகுதிகள் அதிகம் உள்ளதால் கரடி, சிறுத்தை, காட்டு எருமை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வந்து அச்சுறுத்துகிறது. இந்நிலையில் நேற்று இரவு குன்னுார் அருகில் உள்ள ஐபீல்டு எஸ்டேட் பகுதியில் உள்ள  சாக்லேட் தயாரிக்கும் பேக்டிரியில் கரடி புகுந்து கதவுகளை உடைத்து அங்கிருந்த 2 கிலோ சாக்லேட்களை சேதப்படுததியது.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த போது, கரடி ஒன்று சாக்லேட் பேக்டிரியில் உள்ளே புகுந்து அங்கிருந்த சாக்லேட்களை தின்று, பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இது குறித்து  கடை உரிமையாளர் தமிழ்செல்வி கூறுகையில், கடந்த சில நாட்களாக கரடிகள் தொந்தரவு அதிகரித்துள்ளதாகவும், நேற்று இரவு கடையை உடைத்து உள்ளே புகுந்து சாக்லேட்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.