இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து...! இருவர் பலி..!

இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து...! இருவர் பலி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வாவிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக சக்திவேல் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் பல்லடத்திலிருந்து வாவிபாளையம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது விவசாய நிலத்திலிருந்து மின்கம்பத்தை எடுத்துக்கொண்டு மேற்கு நோக்கி பல்லடம் - உடுமலை சாலைக்கு அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கணபதிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (70), சோமசுந்தரம் (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் இந்த விபத்தின் காரணமாக பல்லடம் - உடுமலை சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இது  குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் உயிரிழந்த இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இந்த விபத்திற்கு காரணமான ஜேசிபி வாகனத்தை இயக்கிய மதுரையை சேர்ந்த அழகுராஜா (28) என்பவரை கைது செய்தும் ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.