கார் விபத்தில் 3 பேர் பலி... 5பேர் படுகாயம்...

கார் விபத்தில் 3 பேர் பலி... 5பேர் படுகாயம்...

திருச்சி | மாத்தூர் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், மூன்று பேர் பலியாகிய நிலையில், 5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில்  மகிஷா ஸ்ரீ (12),சுமதி (45)டிரைவர் கதிர் (47) பேர்  பலியாகினர். இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5 க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடத்திய அதிகாரிகள்...

மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சாலை விபத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!