218 - வது கோவை டே.....!!! வாழ்த்துகளை உற்சாகமாக வெளிப்படுத்திய மாணவர்கள்...!

218 - வது கோவை டே.....!!! வாழ்த்துகளை உற்சாகமாக வெளிப்படுத்திய மாணவர்கள்...!
Published on
Updated on
1 min read

கோவை தினத்தை ஒட்டி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் கோவை மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் விதமாக மாணவ மாணவிகள்  தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

கோவை மாநகரம் உருவாகி 218 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவை நகரம் உருவானதாக கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 - ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள வீசிஎஸ்எம் என்ற தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் 'ஹேப்பி கோயம்புத்தூர் டே' என்ற எழுத்துக்கள் வடிவில் மைதானத்தில் அமர்ந்து கோவை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com