மின்கம்பி உரசியதில் தீயில் கருகிய 2 ஏக்கர் கரும்பு தோட்டம்...

திருப்பத்தூர் அருகே கரும்புசோகையில் மின் கம்பி உரசியதில் கரும்புத்தோட்டம் எரிந்து நாசமாகியுள்ளது.
மின்கம்பி உரசியதில் தீயில் கருகிய 2 ஏக்கர் கரும்பு தோட்டம்...
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் | திருப்பத்தூர் அடுத்த மகாதேவராவ் விவசாயி இவருடைய நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் அளவில் உள்ள கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் இன்று நிலத்தின் மேலே சென்றிருந்த மின்கம்பி மீது கரும்பு சோகை மின் கசிவு ஏற்பட்டு  மள மள வென தீப்பற்றி எரிந்தது.

இதன் காரணமாக இரண்டு ஏக்கரில் உள்ள பயிரிடப்பட்டிருந்த அனைத்து கரும்புகளும் எரிந்து நாசமாயின பின்னர்  தீ  அனைத்தும் தானாகவே அனைந்தது. இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் குரிசிலாப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி மகாதேவராவ் கோரிக்கை வைத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com