
சேலம் | அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன்(57) என்பவர் தேநீர் தூள் மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது ஒரு மகள், இரண்டு மகன்கள் குடும்பம் என அனைவருடனும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனிவாசன், அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அதில், தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த அம்மாபேட்டை காவல்துறையினர் வீட்டில் இருந்த தங்க நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் வேலையாட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டிலிருந்த 132 தங்க நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | லிஃப்ட் கேட்பது போல நடித்து கொள்ளையடித்த சகோதரர்கள் கைது...