மாசு கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாத, சரவணா செல்வரத்தினம் கடைக்கு சீல்??

சென்னை அடுத்த பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையை சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை, பல்லாவரம் அடுத்த பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், தனியார் வணிகவழகமான சரவணா செல்வரத்தினம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடைக்கும் மின் இணைப்பு வழங்காததால் ஜெனரேட்டர் மூலம் இயங்கி வருகிறது. அதிகப்படியாக ஜெனரேட்டர் பயன்படுத்துவதால் மாசு ஏற்படும் என்பதால் இன்று மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சரவணா செல்வரத்தின வணிக வளாகத்தை மூடி சீல் வைக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில், இதனை அறிந்த கடையின் ஊழியர்கள் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீல் வைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் அதிகாரிகள். மிகப்பெரிய வணிக வளாகமான சரவணா செல்வரத்தினம் கட்டிடம் கட்டப்பட்டு இதுவரை மின் இணைப்பு பெறாமல் ஜெனரேட்டரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || அலட்சிய போக்குடன் உயிர்களில் விளையாடும் ராஜீவ் காந்தி மருத்துவமனை!!