சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது...

வத்தலகுண்டு அருகே சிறுமியை பாலியல் கொடுமை செய்த தொழிலாளி ஃபோக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது...

திண்டுக்கல் | வத்தலக்குண்டு அருகே கருப்பன் மூப்பன் பட்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(40) என்ற தொழிலாளி  யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தமாக தூக்கிக் சென்று பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெற்றோர் அளித்த புகார் அடுத்து சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய செல்வத்தை வத்தலக்குண்டு போலீசார் ஃபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர்...மடக்கி பிடித்த போலீசார்...உத்தரவிட்ட நீதிமன்றம்!