கணவன் இருக்கும்போதே கள்ளகாதலனோடு ரேவதி...  லீவு நாளிலும் சந்திக்க செல்லும் மனைவி!! ஈரோடு திக் திக்

கணவன் இருக்கும்போதே கள்ளகாதலனோடு ரேவதி...  லீவு நாளிலும் சந்திக்க செல்லும் மனைவி!! ஈரோடு திக் திக்

கடந்த 16-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு நேரத்தில் கருப்பன் என்பவரிடம் இருந்து சோமசுந்தரம் என்பவருக்கு அழைப்பு செல்கிறது. மறுமுனையில் செல்போனை எடுத்துப் பேசுகிறார் சோமசுந்தரம். உனது தங்கையை கொலை செய்து சரித்திருக்கிறேன். பிணமாக விழுந்து கிடந்த உன் தங்கையை வந்து அள்ளிக் கொண்டு போ.. என்று பேசி மொபைல் அழைப்பை துண்டிக்கிறது. அய்யோ. தனது தங்கையை கொன்று விட்டானே படுபாதகன் என மாரில் அடித்துக் கொண்டு பதற்றத்தோடு செல்கிறார் சோமசுந்தரம். தங்கையின் வீட்டை அடைவதற்கு முன்பாகவே, காவல்துறையிடம் தகவல் கூறினார். 

சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவியும், ரேவதி வீட்டின் பெட்ரூமிற்கு சென்று பார்த்த போது, ரேவதி குப்பறப்படுத்த நிலையில் இருந்துள்ளார். அவரது அருகில் ஒரு சிறுவன் அழுதுகொண்டும், மற்றொரு சிறுவன் தூங்கிக்கொண்டு இருந்துள்ளான். ரேவதி, வாயில் ரத்தமும், கழுத்தில் காயமும் இருந்துள்ளது கருப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகம், சித்தோடு போலீசில் புகார் தொரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரணையைத் தொடங்கினர் போலீசார். 

ஈரோடு மாவட்டம் ஜம்பை பகுதியில் வசித்து வந்தவர்தான் கருப்பன். சரக்கு ஆட்டோவில் டிரைவராக வேலைபார்த்து வந்த கருப்பன், சித்தோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரேவதியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்திருந்தார். கருப்பன் – ரேவதி தம்பதிக்கு யஸ்வந்த், ரோகித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரேவதி, கொங்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த ரேவதி, வேலை நேரத்திலும் கூட, யாருடனோ அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இந்த தொலைபேசி உரையாடல்கள் வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்ந்திருக்கிறது. 

கணவன் கருப்பன் வீட்டில் இருந்த நேரத்தில் ரேவதியின் மொபைலுக்கு அடிக்கடி மிஸ்டு கால் வருமாம். யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று கேட்டால், பள்ளியில் இருக்கும் சத்துணவு ஆயாதான் போன் செய்கிறார் என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி மழுப்பி விடுவாராம் ரேவதி. மேலும் ரேவதி விடுமுறை நாட்களில் கூட, பள்ளிக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கணவர் கருப்பனிடம் சொல்லாமல் வெளியே செல்லும் ரேவதி, வெகு நேரம் கழித்துதான் வீட்டுக்கு வருவாராம். வெளியே சென்று திரும்பி வந்தவரிடம் கணவர் எங்கே சென்றாய் என்று கேட்டால், அதற்கு சரியான காரணத்தையும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இது கருப்பனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.  இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகாறு நடந்திருக்கிறது. 

ரேவதிக்கு யாருடனோ தொடர்பு இருக்குனு சந்தேகம்தான் ஏற்படுது கருப்பனுக்கு. ஆனா, இவருதான்னு கண்டு பிடிக்குறதுக்கு முன்னாடியே, மனைவியின் மீது அதிரடியான நடவடிக்கையில அவசரப்பட்டு இறங்கிடுறாரு 

இந்த நிலையில் கடந்த 16-ம் தேதியன்று இரவு கணவன் – மனைவ்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பன், ரேவதியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கொலை செய்த கருப்பனை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே போலீசார் கருப்பனை தேடிக் கொண்டிருந்த நிலையில் சித்தோடு போலீஸ் நிலையத்தில் கருப்பனே  தாமாகவே முன்வந்து சரணடைந்து விட்டார். சரணடைந்த கருப்பனிடம் கொலைக்கான காரணத்தினைக் கேட்டறிந்தனர். அப்போது ரேவதி குறித்த உண்மைகளை போட்டு உடைத்தார் கருப்பன். 

கருப்பனுக்கும், ரேவதிக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் நன்றாகத்தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் சில வருடங்கள் கழிந்து திருமண உறவு கசந்து போனது. கருப்பன், வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தனிமையை அனுபவித்த ரேவதி, அதனை பயன்படுத்திக் கொண்டு செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பாராம். வெளியே இருந்து மனைவிக்கு போன் செய்தவர், வெகு நேரமாக வெயிட்டிங்கில் சென்று கொண்டிருந்ததே? யாரிடம் பேசிக் கொண்டிருந்தாய் என்று கேட்டால், பொய்க் காரணங்கள் சொல்லி சமாளித்து விடுவாராம். வீட்டுக்கு வந்த கருப்பன், செல்போனைக் கேட்டால் தர மறுத்து விடுவாராம். அதையும் மீறி யாரும் இல்லாத நேரத்தில் செல்போனை எடுத்துப் பார்த்தால், அதில் போன் செய்தவர்களின் விவரங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டிருந்ததாம். 

தனது மனைவி யாருடனோ தொடர்பில் இருக்கிறாள் என்பதை ஊகித்துக் கொண்ட கருப்பன் அது தொடர்பாக அடிக்கடி கேட்டு ரேவதியிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். என் மீது சந்தேகம் கொள்கிறாயா? என்று ரேவதியும் பதிலுக்கு சண்டை போட்டிருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பானது.  கடந்த 16-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சாதாரணமாக தொடங்கிய இவர்களது சண்டையில் கடுமையான ஆத்திரத்தில் இறங்கினார் கருப்பன். வீட்டில் கிடந்த துண்டு வேட்டியை எடுத்து ரேவதியின் கழுத்தில் போட்டவர், ஒரே இறுக்காக இறுக்கினார். கட்டிய கணவன் இங்கிருக்க, வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறாயா? 10 வருடங்களிலேயே எனது உறவு கசந்து போய் விட்டதா? என்று 
ஆத்திரம் பொங்க கேட்டவர் துண்டினால் கழுத்தை இறுக்கி பிடித்தார்.

கருப்பனின் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்த ரேவதி, சிறிது நேரத்திலேயே மூச்சு திணறி துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி ரேவதியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கருப்பன், அடுத்த நிமிடமே, ரேவதியின் அண்ணன் சோமசுந்தரத்துக்கு போன் செய்தார். மறுமுனையில் சோமசுந்தரம் எடுத்தவுடன், உனது தங்கையின் நடத்தை சரியில்லை. வழிதவறி சென்ற உன் தங்கையின் கதையை முடித்து விட்டேன். வந்து உன் தங்கையின் பிணத்தைப் பார்த்துக் கொள் என்று கர்ஜனையோடு சொல்லி போனை துண்டித்து விட்டார். ஓடோடி வந்த ரேவதியின் பெற்றோர் ஆறுமுகம், குப்பாயி, சகோதரர் மற்றும் உறவினர்கள் ரேவதியின் உயிரற்ற உடலைப் பார்த்து கதறி அழுதனர். 

தவறான வழியில் சென்ற மனைவியை அறிவுரை சொல்லி திருத்துவதை விடுத்து, ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று விட்டாரே என்று நினைத்து உறவினர்கள் கதறி அழுதது, அந்த பகுதி மக்களை அனுதாபம் கொள்ள வைத்திருக்கிறது.