மாநகராட்சி சுடுகாட்டில் வாலிபர் வெட்டி படுகொலை!!!

மது அருந்தி கொண்டிருந்தபோது இந்த கொலை நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி சுடுகாட்டில் வாலிபர் வெட்டி படுகொலை!!!

சென்னை: வியாசர்பாடி, சர்மா நகர் 7வது தெரு  தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு வயது 30. இன்று மதியம் 12 மணியளவில் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | ”என் தம்பி தலைய கேட்டியாமே! இப்போ எடு பாப்போம்!!!”- சவால் விட்ட பிரபல ரவுடி!!!

அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திக் உடன் மது குடித்துக் கொண்டிருந்த  ஐந்து பேர் சரமாரியாக கார்த்திக்கை வெட்டினர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து நபர்கள் தப்பி சென்று விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார், கார்த்திக்கின்  உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்...!

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் விசாரணையில் இரண்டு மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடியான காட்டான் மோகன் என்பவரிடம் சேர்ந்து கார்த்திக் மது அருந்தியதாகவும், அப்போது கார்த்திக் காட்டான் மோகனை அடித்ததாகவும் அந்த முன் விரோதத்தில் காட்டான் மோகனின் மகன் மாதவன் என்பவர் தனது நண்பர்களின் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது தொடர்ந்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.