#BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING | உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு... தற்கொலை முயற்சியால் பரபரப்பு....

சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் முன் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள சட்ட உதவி மைய வளாகத்தின் முன் வந்த நபர் ஒருவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

மேலும் படிக்க | சப்தம் போடாமல் விளையாடுங்கள் கூச்சமே இல்லாமல் சொல்கிறார்கள் குழந்தைகளிடம்

உயர் நீதிமன்றம் முன் தீக்குளித்த நபர்

ஆனால் அதற்குள் அவருக்கு 80 சதவீத  தீக்காயம் ஏற்பட்டது. உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லாமல், அவரது பெயர், ஊர் குறித்த தகவல்களை காவல்துறையினர் கேட்டுக்  கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் தற்கொலைகள்....!! மனநலம் குறித்து சில தகவல்கள்...

மருத்துவமனை அதீக்காயமடைந்தவரிடம் 

இது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனிடையே தீக்குளித்த நபர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பதும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து தீக்குளித்ததும் தெரிய வந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மனநல தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டம்...