பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பா: கருவை கலைக்க முடியததால் ஆண் குழந்தை பெற்ற சிறுமி...

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பா: கருவை கலைக்க முடியததால்  ஆண் குழந்தை  பெற்ற சிறுமி...

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ஆனந்தியின் சகோதரி மகள் பள்ளியில் 10 ஆம்  வகுப்பு பயின்று வருகிறார். மாணவியின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அவரது தாயார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனிடையே வீட்டில் தனியாக இருந்த மாணவியை, மகள் உறவுமுறை என்றும் பாராமல், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் மாணவி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் கருவை கலைக்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சித்தப்பா ராமரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.