தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்...

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்...

இராமநாதபுரம் | திருவாடானை அருகே ஓரியூர் - மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரது மனைவி கோவிந்தம்மாள். இவருக்கு வயது 60.

மூதாட்டியான இவர் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று இரவு வயலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி கோவிந்தம்மாள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 2002 குஜராத் கலவரம்.... நிரூபிக்கப்படாத குற்றமும் விடுதலையும்....

இந்நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவிந்தம்மாள் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி. தங்கதுரை தலைமையில் திருவாடானை டிஎஸ்பி. நிரேஷ், இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் உட்பட ஏராளமான போலீசார் கொலை நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | மகள் காதலனுடன் சென்றதால் தாய் தந்தை தற்கொலை

அதன் பிறகு இராமநாதபுரம் கைரேகை நிபுணர்களும் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கொலையாளிகளின் கைரேகைகளையும் தடயங்களையும் சேகரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் கொலை நடந்த வயல் பகுதியில் இருந்து சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது.

அதன் பிறகு போலீசார் படுகொலை செய்யப்பட்டு கிடந்த மூதாட்டி கோவிந்தம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடி தலைமறைவான கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | மனைவி திட்டியதால் விஷம் குடித்த கணவனின் நண்பர்கள்...