சிறுமியுடன் உல்லாசம்... கண்டித்த பெற்றோரை மிரட்டிய காதலன் குடும்பம்...

சிறுமியுடன் உல்லாசம்... கண்டித்த பெற்றோரை மிரட்டிய காதலன் குடும்பம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்கள் உள்பட 8 பேரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

 தேன்கனிகோட்டை அருகேயுள்ள பேடரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கேசவன் என்பவர் , அதேபகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் கேசவன். இதனால் கர்ப்பமடைந்தஅந்த மாணவியை  கேசவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கு கேசவனின் குடும்பத்தை சேர்ந்த பலர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் கேசவனின் குடும்பத்தினரிடம் கேட்டதற்கு, மாணவியின் பெற்றோரை  மிரட்டியுள்ளனர் கேசவன் குடும்பத்தினர்.  இதுதொடர்பாக அவர்கள் தேன்கனிகோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை மகளிர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கேசவன் மாணவியை கர்ப்பமாக்கியதும், அவரது குடும்பத்தினர் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததும், மாணவியின் பெற்றோரை மிரட்டியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கேசவன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் அழகேசன், பச்சமுத்து, ஆனந்தன், பச்சப்பன், கிருஷ்ணன், வாசன், மாதப்பன் ஆகிய 8 பேரை தேன்கனிகோட்டை அனைத்து மகளிர்  போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.