டயர் வெடித்து விளம்பர பலகையில் மோதிய கார்...

மன்னார்குடி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விளம்பர பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டயர் வெடித்து விளம்பர பலகையில் மோதிய கார்...

திருவாரூர் | மன்னார்குடி  அருகே  மன்னார்குடி பைபாஸ் பகுதியில் பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் மகாதேவ பட்டினத்தில் இருந்து வந்திருந்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது காரின் முன்பக்க டயர்வெடித்தது.

அதில் நிலை தடுமாறி அருகில் இருந்த தனியார் சேவை அமைப்பின் பெயர் பலகை மீது மோதி நின்றது. அங்குநின்ற பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு  யாருக்கும் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த மாணவ மாணவியா்கள் நூலிலையில் உயிர் தப்பினார்கள்.

மேலும் படிக்க | ‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...

மாணவர்கள் பேருந்துகாக  காத்திருக்கும் பொழுது மாணவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மிக அருகில் காரின் டயர் வெடித்த காரை ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் மாணவர்கள் மீது கார் மோதாமல் பெயர் பலகையில் மோதி காரை நிறத்தினார்.

இந்த வேகமாக வந்த காரின் டயர் வெடித்து  பெயர் பலகையில் மேதும்  சிசிடிவி காட்சி தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து...