மொத்தம் 5 பேர் சேர்ந்து ரூமில் அடைத்து பலாத்காரம்!! மிரட்டி மிரட்டியே அக்கிரமம் பண்ணிய கொடுமை!!

மொத்தம் 5 பேர் சேர்ந்து ரூமில் அடைத்து  பலாத்காரம்!! மிரட்டி மிரட்டியே அக்கிரமம் பண்ணிய கொடுமை!!
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் வங்க தேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் சித்ரவதை செய்து வீடியோ பதிவு செய்து வெளியிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வங்க தேசத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரை அதே நாட்டை சேர்ந்த 6 பேர் சித்ரவதைக்கு உள்ளாக்கி, கொடூரமான வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில் அப்பெண்ணின் அந்தரங்க பாகத்தில் கண்ணாடி பாட்டிலை உட்புகுத்திய கொடூரர்கள், அப்பெண்ணை அடித்து உடைத்து காயப்படுத்தியது மட்டுமின்றி, அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஈவு இரக்கமற்ற காமக்கொடூரர்களின் வெறியாட்டம் அடங்கிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பார்ப்போர் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் 2 பேர் பெண்கள் எனவும் அவர்கள் அனைவரும் வங்க தேச நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்பெண்ணை வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நாடு கடத்தி வந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட பெண் வேறு மாநிலத்தில் இருப்பதாவும் அப்பெண்ணை விசாரணைக்கு பெங்களூரு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com