கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்..! உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் நடந்த கொடூர செயல்..!
மதுபோதையில் விஷம் அருந்து தற்கொலை என நாடகம்..!

கோவை வடவள்ளியில் நண்பனை குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன்ராஜும், நம்பியழகம் பாளையத்தை சேர்ந்த மதன்ராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் . ஒருநாள் மதன்ராஜிடம், ஜெகன்ராஜ் செல்போன் வாங்கி தர சொல்லி பணம் கொடுத்துள்ளார். ஆனால் மதன்ராஜ் செல்போன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால், ஆத்திரமடைந்த ஜெகன்ராஜ், மதன்ராஜின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!
அப்போது நண்பர் ஜெகன்ராஜை, மதன் ராஜ் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு, வீரகேரளம் பகுதியில் மயானப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குற்றவாளியான மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மது போதையில் கண்ணாடி பாட்டிலை உடைத்து குத்தியதில் கட்டில் வியாபாரி படுகாயம் அடைந்தார்.
சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேங்கைப்பட்டி சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!
அப்போது, போதையில் உடன் இருந்தவர்கள் கண்ணாடி பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தியதில் பாலகிருஷ்ணன் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்து கொண்ட மருமகனை மாமனார் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன், இவரும் முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரண்யாவும் காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் ஜெகனின் பெற்றோர் இருவரையும் ஏற்று கொண்ட நிலையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!
இந்நிலையில் இன்று டைல்ஸ் வேலை செய்து வந்த ஜெகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றபோது, காவேரி பட்டினம் அருகே வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் ஜெகனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு கூடிய ஜெகனின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போலீசாரிடமும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து காவல்துறையினர் சமாதானம் பேசி ஜெகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலையாளி சங்கர் அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் தனது மகளுக்கு நன்கு வசதியான இடத்தில் நிச்சயதார்த்தம் செய்த நிலையில் தனக்கு பிடிக்காதவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மருமகனை தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
திருவண்ணாமலை அடுத்த கருந்துவம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான செம்மறியாடு தண்ணீர் குடிக்க சென்ற போது நீரில் மூழ்கியதால் ஆட்டை காப்பாற்ற சென்ற திருவேங்கடம் மீன் வலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரைக் காப்பாற்ற சென்ற ரமேஷ் என்பவரும் மீன் வலையில் சிக்கி ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செம்மறி ஆட்டை காப்பாற்ற சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துவம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குமார் சங்கர் சகோதரர்களால் ஏரியில் போடப்பட்ட மீன் வலையில் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான ஆடு தண்ணீர் குடிக்க சென்ற போது சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டின் உரிமையாளர் திருவேங்கடம் காப்பாற்ற சென்றபோது அவரும் மீன் வலையில் சிக்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற ரமேஷ் என்பவரும் மீன் வலையில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயர்ந்துள்ளனர்.
செம்மறி ஆடு இறந்து மிதப்பதை அப்பகுதியில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது திருவேங்கடம் ரமேஷ் இருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரியில் மீன் பிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வலையில் செம்மறி ஆடு மற்றும் செம்மறி ஆட்டின் உரிமையாளர் அவரை காப்பாற்ற சென்றவர் என இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நட்சத்திர விடுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... !!
எழும்பூர் நட்சத்திர விடுதியில் நடனம் ஆடும் போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை தட்டிக்கேட்டவர்களுக்கு அடி உதை.
சென்னை எம்.ஆர்.சி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(30). இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரமேஷ் தனது நண்பரான தினேஷ் மற்றும் ஒரு பெண் தோழியுடன் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பாருக்கு மது அருந்த வந்துள்ளார்.
பின்னர் மூவரும் மது அருந்தி விட்டு பாரில் நடனம் ஆடிய போது, அங்கிருந்த சிலர் பெண் தோழியான இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட ரமேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் அவர்களை தட்டிக்கேட்ட போது, சுமார் 8 நபர்கள் ஒன்றிணைந்து இருவரையும் தாக்கிவிட்டு, மதுபாட்டிலை எடுத்து ரமேஷ் தலையில் தாக்கி உள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ரமேஷ் எழும்பூர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி.... அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம்!!