பண தகராறில் இளைஞர் குத்திக் கொலை...குற்றவாளியை பிடித்த போலீசார்...!

பண தகராறில் இளைஞர் குத்திக் கொலை...குற்றவாளியை பிடித்த போலீசார்...!

கோவை வடவள்ளியில் நண்பனை குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி அடுத்த வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகன்ராஜும், நம்பியழகம் பாளையத்தை சேர்ந்த மதன்ராஜ்  இருவரும் நெருங்கிய நண்பர்கள் . ஒருநாள் மதன்ராஜிடம், ஜெகன்ராஜ் செல்போன் வாங்கி தர சொல்லி பணம் கொடுத்துள்ளார். ஆனால் மதன்ராஜ் செல்போன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால், ஆத்திரமடைந்த ஜெகன்ராஜ், மதன்ராஜின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டம் குறித்த சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு! மத்திய அரசு ஒப்புதல்!!

அப்போது நண்பர் ஜெகன்ராஜை, மதன் ராஜ் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு, வீரகேரளம் பகுதியில் மயானப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குற்றவாளியான மதன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.