மொத்தம் 3.. கரெக்டாக Maintain பண்ணிட்டு வந்த பெண்.. ஆனால்.?.. செப்டிக் டேங்கில் Body-யை போட்ட இரண்டாவது!!

மொத்தம் 3.. கரெக்டாக Maintain பண்ணிட்டு வந்த பெண்.. ஆனால்.?.. செப்டிக் டேங்கில் Body-யை போட்ட இரண்டாவது!!

கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து வருகிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால் - கீதா தம்பதி. இவர் சிஆர்பிஎஃப் படையில் ஜவானாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்  உள்ளனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதியன்று, மனைவிக்கு மணிப்பூரில் இருந்துக்கொண்டே போன் செய்துள்ளார் இந்தர்பால். ஆனால் மனைவி கீதா அவரது போனை எடுக்காததால், தொடர்ந்து முயற்சித்திருக்கிறார். அப்பவும் முழு ரிங் போகிறதே தவிர யாரும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த இந்தர்பால் உடனடியாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் கீதா இல்லாததை அறிந்த இந்தர்பால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து  விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கீதாவின் போனை சோதனை செய்த போலீசாருக்கு கீதாவிடம் முக்தர் என்பவர்தான் கடைசியாக பேசியுள்ளார் என்ற துப்பு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார், முக்தரை தேடி பிடித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான் கீதாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது.

அதாவது கீதாவின் கள்ளக்காதலன்தான் இந்த முக்தர். இவர் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால் நெருங்கி பழகி வந்துள்ளனர்.  திடீரென கீதா இன்னொரு நபருடன் பழகி வந்திருக்கிறார். இந்த விஷயம் தெரிந்த முக்தர், கீதாவை கண்டித்துள்ளார். ஆனால், கீதா அதை காதிலேயே வாங்காமல் தொடர்ந்து அந்த புதிய நபருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முக்தர் கீதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி மாஸ்டர் பிளானை போட்டுள்ளார். 

அதன்படி சம்பவத்தன்று கீதாவை சமாதானம் பேச காரில் அழைத்து சென்ற முக்தர், தனது நண்பர்கள் 2 பேரின் உதவியோடு, காரிலேயே கீதாவின் கழுத்தை நெரித்து கொன்று, அங்குள்ள கழிவு நீர் தொட்டி ஒன்றில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவ்வளவையும் விசாரணையில் போலீசாரிடம் வாக்குமூலமாக முக்தர் தெரிவித்துள்ளதையடுத்து கைதாகி உள்ளார். மேலும்  காரில் கீதாவை கொலை செய்ய உதவிய மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.