பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன்...

தஞ்சை அருகே திருமணமாகாத இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன்...

தஞ்சை மாவட்டம் சூழியக் கோட்டை கிராமத்தில் வசித்து வரும் சிவலிங்கம் என்பவரின் மகள் கனகவல்லி. 31  வயது ஆகியும் திருமணமாகாத இவர் நாள்தோறும் காலை 8 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வதும், மீண்டும் மாலை 5 மணிக்கு ஆடுகளுடன் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதேபோல் 25 ம் தேதி காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார் மாலை ஆடுகள் மட்டும் வீடு திரும்பி இருக்கின்றன. கனகவல்லி வீடு திரும்பவில்லை வழக்கமாக அக்கம்பக்கத்தினரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம் என்பதால் பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இரவு ஆகியும் கனகவல்லி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழக்கமாக ஆடு மேய்க்கச் செல்லும் இடங்களில் தேடி உள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதியில் கனகவல்லியின் காலணி மற்றும் கை அருவாள் கிடந்ததை கண்டு அப்பகுதி முழுவதும் தேடி இருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த அடர்ந்த புதர் பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்து சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல் துறையினர் அடர்ந்த வனப் பகுதியில் சடலமாக கிடந்த கனகவல்லி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடந்த மீன் பிடிக்கும் கம்பினை மீட்டு அதன்பேரில் துரிதமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவனை காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரத்ததில் தனிமையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கனகவள்ளியை வழுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் தூன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்ததை ஒப்புக்க்கொண்டுள்ளார்.

மேலும் பல நாட்களாக நோட்டமிட்டு இச்சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து பெரியசாமியிடம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்