வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை.. கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

உசிலம்பட்டியில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை.. கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சசிகலா, மணிவண்ணன் என்பவரை  கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்   மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகம் வரதட்சணை கேட்டு சசிகலாவை சித்திரவதை செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கணவர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்

இந்த வழக்கு மதுரை மாவட்ட  மகிளா  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று  தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம் உறுதியானதால் சசிகலாவின் கணவர் மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதமும், மாமியார் உட்பட 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து  நீதிபதி கிருபாகரன்  பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.