இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு, கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு.!!

திருப்பூரில், இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு, கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு, கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு.!!

திருப்பூர் மாவட்டம், அத்திக்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தாயார் ஜானகியுடன் வசித்து வரும் சிவக்குமாரின் வீட்டிற்கு தண்ணீர் கேட்டு வந்த 3 பேர், திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி, பணம் பறிக்க முயன்றுள்ளனா்.

இதில் சிவக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனா். படுகாயம் அடைந்த சிவக்குமார் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்..