பைனான்சியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. இது தான் காரணமா?.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

ஓசூரில் முன்விரோதம் காரணமாக பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைனான்சியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. இது தான் காரணமா?.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவரை நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்த புகாரில், போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட உதயகுமார் மீது, அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்ய முயன்றதாக மத்திகிரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் முன் விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.