இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு.. கைது செய்யப்பட்ட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!!

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யபட்ட 4 பேரின்  நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு.. கைது செய்யப்பட்ட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!!

விருதுநகரில் 22 வயது இளம்பெண்  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமது ,மாடசாமி,பிரவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்ட 4  பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களது காவல் முடிவடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு  நீதிமன்றத்தில் நால்வரையும்  போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் அடுத்த மே மாதம் 2 ஆம் தேதி வரை  நீதிமன்றக் காவலை நீட்டித்து மதுரை மத்திய சிறையில் அடைக்க  உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அழைத்து வந்த வாகனம் பழுதாகி நீதிமன்ற வளாகத்துக்குள் நின்றதால் நால்வரையும் அழைத்து செல்ல முடியாமல்  காவல்துறையினர் திகைத்தனர். அதன் தொடர்ச்சியாக மாற்று வாகனம் மூலம் கைதிகள் அழைத்து செல்லப்பபட்டனர்.