நான் யார் தெரியுமா...? இன்ஸ்டா செலிபிரிட்டி...! டிராபிக் போலீசிடம் வாக்குவாதம் செய்த இளைஞரின் வீடியோ..!

நான் யார் தெரியுமா...? இன்ஸ்டா செலிபிரிட்டி...!  டிராபிக் போலீசிடம் வாக்குவாதம் செய்த இளைஞரின் வீடியோ..!

சென்னையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் எனக்கூறி  போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை அண்ணாசாலை பகுதியில் நேற்றிரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றில் தலைக்கவசம் அணியாமல் தனது தோழியுடன் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இளைஞரிடம் ஓட்டுனர் உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த இளைஞருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நிலையில், ஆத்திரமடைந்த இளைஞரும் அவரது தோழியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அந்த இளைஞர், தான் ஒரு இன்ஸ்டா பிரபலம் எனவும், தனக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருப்பதாகவும் கூறி, தன்னால் அபராதமெல்லாம் கட்டமுடியாது எனவும் உங்களை வீடியோ எடுத்து எனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவேன் எனக்கூறி வீடியோ எடுத்துள்ளார். அதேபோல இளைஞரின் செயல்களை போக்குவரத்து போலீசாரும் வீடியோ எடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிக்க : மின் உற்பத்தி பாதிப்பு...! சரி செய்ய ஒரு மாதகாலமாகும் என அறிவிப்பு ...!