மகளை கர்ப்பமாக்கிய பெரியப்பா போக்சோவில் கைது: ஓராண்டாக பாலியல் துன்புறுத்தல் செய்தது அம்பலம்!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்பமாக்கிய உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகளை கர்ப்பமாக்கிய பெரியப்பா போக்சோவில் கைது: ஓராண்டாக பாலியல் துன்புறுத்தல் செய்தது அம்பலம்!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தாய், தந்தையர் இல்லாத நிலையில் தனது சித்தி வீட்டில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறுமியை அவரின் சித்தி மருத்துவரிடம் காட்டியுள்ளார். அப்போது சிறுமி 5 மாதம் கர்பபமாக இருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, இச்சம்பவம் தொடர்பாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தூரத்து உறவினரான பெரியப்பா முறைகொண்ட ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கடந்த ஒரு வருடமாக தனது கடைக்கு அழைத்துச் சென்று மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து விஸ்வநாதனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு அனைத்து வகை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளவும், மன ரீதியிலான உளவியல் பயிற்சிகளை அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.