பாஜக பிரமுகரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது.!!

சென்னையில் பாஜக பிரமுகரை வெட்டிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக பிரமுகரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது.!!

சென்னை பெரம்பூர் ஜமுனா பாய் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் பாஜக கட்சியின் வடசென்னை தொழிற்பிரிவு செயலாளராக உள்ளார்.  நேற்று முன்தினம் காலை பத்து  மணி அளவில் மாதவரம் நெடுஞ்சாலை பிருந்தா திரையரங்கம் எதிரே உள்ள டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ராஜூவை, அங்கு வந்த மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை, அந்தபகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவர்,  மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைல் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த  செம்பியம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த நேரம் வெட்டுப்பட்ட பாஜக பிரமுகரின் நண்பரான விஷ்வா என்பவர் வந்து சென்றது பதிவானது. அந்தகாட்சிகளில் அடிப்படையில் செம்பியம் போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதாவது விஷ்வாவும், ராஜுவும் சேர்ந்து சென்னையில் பல கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று அவர்களை ஏமாற்றி உள்ளதாகவும், இதுகுறித்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து ராஜீவ் மற்றும் விஷ்வா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு இருவரும் ஜாமின் பெற்று வெளி வந்த இருவருக்கும் பண தகராறு ஏற்பட்டுள்ளது.  சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜீவ் போன் செய்து எனக்கு கண்டிப்பாக 20 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கூறி மிரட்டி உளளார் இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ்குமாரிடம்  தகவலை சொல்லி ராஜீவை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.

அதேபோன்று சதீஷ்குமார் தனது தம்பி சந்தோஷ் குமார் மற்றும்  காசிமேடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் வைத்து சம்பவத்தன்று ராஜீவுக்கு போன் போட்டு பணம் தருவதாகக் கூறி வர வைத்துள்ளனர். அதன்பிறகு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ராஜுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரை அடையாளம் காட்டுவதற்காக விஷ்வாவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

இந்த காட்சி தான் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து விஷ்வாவை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ராஜீவை வெட்டிய காசிமேடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற நபரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் செம்பியம் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட விஷ்வா மற்றும் லோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.